வட்டுவாகலிலேயே எங்களைச் சுடுங்கள் – ஒளிப்படம் எடுத்த கடற்படையினரிடம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

எங்­கள் காணி­யைத் தாருங்­கள் என்றே உங்­க­ளி­டம் கேட்­கி­றோம். இது பெரும் குற்­றம் என்­றால், மனி­தப் பேர­வ­லம் நடந்த இந்த வட்­டு­வா­கல் மண்­ணி­லேயே எம்­மைச் சுடுங்­கள்.
இவ்­வாறு நேற்று வட்­டு­வா­கல் காணி உரி­மை­யா­ளர்­கள் மேற்­கொண்ட கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்தை ஒளிப்­ப­டம் எடுத்த கடற்­ப­டை­யி­ன­ரி­டம் கூறி­னர் அங்கு நின்ற மக்­கள்.
வட்­டு­வா­க­லில் பொது­மக்­க­ளின் காணி­களை விடு­விக்­கக் கோரி நேற்­றுக் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.இதில் பங்­கேற்ற காணி உரி­மை­யா­ளர்­க­ளைக் கடற்படையினர் ஒளிப்படம் எடுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட காணி விடுவிப்புப் போராட்டங்களில் பங்கேற்ற பொதுமக்களை முப்படையினரும் ஒளிப்படம் எடுத்து வருகின்றனர்.இது தமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயற்பாடு எனப் போராட்டங்களில் பங்கேற்ற மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று வட்டுவாகலில் நடந்த போராட்டத்தையும் கடற்படையினர் ஒளிப்படம் எடுத்தனர்.
 இதனை அவதானித்த மக்கள் “எங்கள் காணியைத் தாருங்கள் என்றே உங்களிடம் கேட்கிறோம். இது பெரும் குற்றம் என்றால், மனிதப் பேரவலம் நடந்த இந்த வட்டுவாகல் மண்ணிலேயே எம்மைச் சுடுங்கள்” எனத் தெரிவித்தனர்.
அரசாங்க பதவிகளில் முக்கிய மாற்றம்! – ஜனாதிபதி அறிவிப்பு
ஆலய வழிபாட்டிலும் வாழ்வாதாரத்திலும் இராணுவத் தலையீடு - வட்டுவாகல் மக்கள் கொதிப்பு

Laisser un commentaire

Votre adresse de messagerie ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *